உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லோக்சபா தேர்தல் எதிரொலி: நாடு முழுதும் பா.ஜ., பேரணி

லோக்சபா தேர்தல் எதிரொலி: நாடு முழுதும் பா.ஜ., பேரணி

லோக்சபா தேர்தலை ஒட்டி நாடு முழுதும் பா.ஜ., சார்பில் நடத்தப்படவுள்ள பிரமாண்ட பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் நடக்கும் பா.ஜ.,வின் ஆட்சி வரும் மே மாதம் முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் லோக்சபா நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.அதே சமயம், ஓட்டுகளை குவிக்க திட்டமிட்டுள்ள பா.ஜ., நாடு முழுதும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. அக்கட்சியில் உள்ள ஏழு பிரிவுகளின் சார்பில் நாட்டின், 14 பகுதிகளில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை விவசாயிகள், மகளிர், பழங்குடியினர், பட்டியலினத்தவர், இளைஞர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அனைத்துப் பிரிவினருடனான ஆலோசனைக்குப் பின்னர் பேரணிகளை நடத்தப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பர் என்றும் பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் சூழலில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான கூட்டத்தை வட மாநிலங்களில் பீஹார் அல்லது உத்தர பிரதேசத்தில் நடத்தவும், தென் மாநிலங்களில் கர்நாடகா அல்லது தெலுங்கானாவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபான்மையினர் பிரிவின் பேரணி மற்றும் கூட்டங்கள் ராஜஸ்தான் அல்லது மஹாராஷ்டிராவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான கூட்டம் ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் குஜராத்தின் வதேதராவில் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. - -- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை