| ADDED : ஜன 23, 2024 12:09 AM
பாலக்காடு;பாலக்காடு வலியபாடம் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.கேரள மாநிலம், பாலக்காடு நகர் அருகே உள்ள வலியபாடம் சுப்ரமணிய சுவாமி கோவிலிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.காலை, 10:30 மணி முதல் அஷ்டபந்தநியாசம், பிரஹ்மகலசபிஷேகம், பரிகலசாபிஷேகம், மகா தீபாரதனை ஆகியவை நடந்தன. காலை, 10:00 மணிக்கு பல்லாவூர் ஸ்ரீதரன் மாராரின் தலைமையில், 30க்கும் மேற்பட்ட வாத்திய கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, மங்கலாம்குன்னு ஐயப்பன் என்ற யானையில், உற்சவ மூர்த்தி சிலை ஏந்தி வரப்பட்டது.முத்து மணி குடைகளும் ஆடை ஆபரணங்களும் அணிந்த, ஏழு யானைகளின் அணிவகுப்பில் 'காழ்ச்சீவேலி' என்ற நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இருந்து, பஞ்சவாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்பில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடந்தது.