உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவுதினம் அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு

கோவை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, கோவையில் அ.தி.மு.க.,வினர் நினைவஞ்சலி செலுத்தினர். கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஹுசூர் ரோட்டில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட தலைமையகத்தில் இருந்து எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் தலைமையில், பேரணியாகச் சென்ற அ.தி.மு.க.,வினர், அவிநாசி சாலையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெ., ஆகியோரை வாழ்த்தி கோஷம் எழுப்பப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் வென்று, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி ஏற்றனர். பின்னர், 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். கட்சி அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான அ.தி.மு.க.,வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். எம்.எல்.ஏ.,ஜெயராம், அமைப்புச் செயலாளர் செ.ம.வேலுசாமி, மாநில இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை