உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் நலம் பெற ம்ருத்யுஞ்சய ஹோமம்

மக்கள் நலம் பெற ம்ருத்யுஞ்சய ஹோமம்

வடவள்ளி;வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் வடவள்ளி கிளை மற்றும் ஞானம் பவுண்டேஷன் சார்பில், உலக மக்கள் நலம் பெற வேண்டி, ம்ருத்யுஞ்சய ஹோமம் நடந்தது.சிவபெருமானை வேண்டி, நடந்த ம்ருத்யுஞ்சய ஹோமம், வடவள்ளியில் உள்ள தாம்ப்ராஸ் கட்டடத்தில் நடந்தது. இதில், ஸ்ரீ கணபதி வாத்தியார் ஒருங்கிணைப்பில், 10 வேத விற்பன்னர்கள் ஹோமங்களை நடத்தினர்.வடவள்ளி கிளை தலைவர் சங்கரன், பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், உப தலைவர் சீனிவாசன், இளைஞர் அணி தலைவர் கண்ணன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை