உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

 அரசு நடுநிலைப் பள்ளியில் பல்நோக்கு அரங்கம் திறப்பு

கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், பல்நோக்கு அரங்கம் கே.பி.ஆர்., குழுமம் சார்பில் கட்டப்பட்டது. அரங்கத்தை, குழும தலைவர் ராமசாமி திறந்து வைத்து பேசுகையில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேலுசாமி, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஊர் பெரியவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அரங்கம் கட்டி கொடுத்த கே.பி.ஆர்., குழும தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை