| ADDED : ஜன 14, 2024 11:55 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கந்தசாமி மெட்ரிக் பள்ளியில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி அருகே, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான தேசிய இளைஞர் தினத்தையொட்டி, மாறு வேடப்போட்டி நடந்தது. விழா தலைவர் பட்டீஸ்வரன் தலைமை வகித்தார்.திவான்சாபுதுார் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் பேசினார். தொடர்ந்து நடந்த மாறுவேடப் போட்டியில், 54 மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். உடுமலை
கோமங்கலம் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் விவேகானந்தர் உருவபடத்துக்கு மரியாதை செய்தனர்.பள்ளி தமிழாசிரியர் மஞ்சுளாதேவி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். துவக்க நிலை வகுப்பு மாணவர்கள் விவேகானந்தர் போல வேடமிட்டு அவரின் பொன்மொழிகளை கூறினர்.