| ADDED : டிச 06, 2025 06:01 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும். இம்மருத்துவமனைக்கு, நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில், தினசரி 40 முதல் 50 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக உள்ளது. மாலை வரை மட்டுமே டாக்டர்கள் இருப்பதால், இரவில், ஒரு நர்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளனர். இரவில் உள்நோயாளிகளை காண வருவோரில் சிலரும், பாம்புக்கடி, விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுடன் வருபவர்களில் சிலரும், மது அருந்தி வருவதோடு, மருத்துவப்பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, இதனால் கேள்விக்குறியாக உள்ளதால், இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும்.