உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: காரமடை பகுதியில் தீவிரம்

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: காரமடை பகுதியில் தீவிரம்

மேட்டுப்பாளையம் : காரமடையில் உள்ள கேரளா மாநில எல்லை பகுதியான கோபனாரியில் 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.கேரளாவில் அண்மையில் இளைஞர் ஒருவர் 'நிபா' வைரஸ்க்கு உயிரிழந்தார். மேலும், இருவருக்கு 'நிபா' வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதையடுத்து, கோவை -- கேரளா எல்லை செக்போஸ்ட்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரமடை அருகே உள்ள கேரளா மாநில எல்லைப் பகுதியான கோபனாரியில், சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, வாகனங்களில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். பின், அந்த காய்ச்சல் எத்தனை நாட்கள் அவர்களுக்கு உள்ளது, மேலும் இருமல் உள்ளதா, தொண்டை வலி உள்ளதா, நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுகிறதா என பரிசோதனை செய்கிறார்கள். காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும், அந்தந்த வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.மேலும், காரமடை வழியாக கேரளா செல்வோருக்கு 'நிபா' வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களும், கேரளாவுக்கு செல்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை