| ADDED : ஜன 01, 2026 05:06 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையத்தில் வடமாநில உருளைக்கிழங்கு விவசாயிகளின் வர்த்தகத்தை அதிகரிக்க, நீலகிரி மற்றும் வடமாநில உருளைக்கிழங்கு வர்த்தக சபை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக சபையின் தலைவராக ஹாசிம் சேட், செயலாளராக பாபு, பொருளாளராக இமாம் ஜாபர், துணைத் தலைவராக முத்துக்குமார், துணைச் செயலாளராக ஹாரிஸ் ஜாபர், கவுரவ ஆலோசகராக ஜாகிர் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதுகுறித்து செயலாளர் பாபு கூறுகையில், மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு மத்திய பிரதேஷம், குஜராத், உத்தரபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக வருகின்றன. வடமாநில விவசாயிகளின் நம்பிக்கையை அதிகரிக்கவும், வர்த்தகத்தை பெருக்கவும் இந்த வர்த்தக சபை உதவும், என்றார்.