உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலை அருகே விபத்தில் ஒருவர் பலி

ஆனைமலை அருகே விபத்தில் ஒருவர் பலி

பொள்ளாச்சி;கேரள மாநிலம் புதுச்சேரி கிழக்கு வாளையார் பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி, 28. இவரது மனைவியின் பெரியப்பா காளிமுத்து, 55.இருவரும் அய்யாமடையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுவிட்டு, ஆனைமலை - கோட்டூர் ரோட்டில் டுவீலரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அதிவேகமாகச் சென்ற டூ வீலர், ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அதில், காளிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும், அருகில் இருந்தவர்கள், மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதலுதவி சிகிச்சையின்போது, காளிமுத்து இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ