உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விடுபட்டவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை

விடுபட்டவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை

கோவை; கோவையில் விடுபட்ட மாணவர்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் கீழ், கடந்த 10ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு, கடந்த 17ம் தேதி வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''கோவையில், 12 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 98 சதவீதம் பேருக்கு வழங்கியுள்ளோம். கடந்த 10ம் தேதி பேரூர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு அப்பகுதியை சார்ந்த பள்ளி, கல்லுாரிகள் விடுமுறையில் இருந்தன. அங்குள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கும், மற்ற இடங்களில் விடுபட்டவர்களுக்கும் சேர்த்து, மொத்தம், 98 சதவீதம் மாத்திரை வினியோகிக்கப்பட்டு விட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை