உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவுட்டுக்காய் மரணங்கள் தொடரும் சோகம்

அவுட்டுக்காய் மரணங்கள் தொடரும் சோகம்

பெ.நா.பாளையம்:கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில், மலையோர கிராமங்களில் அவுட்டுக்காயால் வனவிலங்குகள் கொல்லப்படும் கொடூரம் தொடர்ந்து நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் அருகே நீலாம்பதி கிராமத்தில், அவுட்டுக்காயை பயன்படுத்தி காட்டு பன்றிகளை கொன்ற சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். கடந்த செப்., ல், தடாகம் அருகே அவுட்டுக்காயால், ஆறு வயது பெண் யானையின் வாய்பகுதி கிழிந்து, சிகிச்சை பலனின்றி பலியானது. இதுகுறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: காட்டுப்பன்றியை குறிவைத்து வைக்கப்படும் அவுட்டு காய்களை யானை உண்பதால், வாய் சிதறி உயிரிழக்கின்றன. அவுட்டு காய் தயாரிக்க பயன்படுத்தப்படும் மருந்தை விநியோகம் செய்யும் நபர்களை, வனத்துறையினர், போலீஸ் உதவியுடன் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது, நவீன சென்சார் கருவிகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றின் தொழில்நுட்ப உதவியோடு வனப்பகுதியில் அவுட்டுக்காய் இருக்கும் பகுதிகளை கண்டறிய, வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வனப்பகுதியில் அந்நியர்கள் நுழைந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ