உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரா விளையாட்டு; சிறப்பு குழந்தைகள் ஆர்வம்

பாரா விளையாட்டு; சிறப்பு குழந்தைகள் ஆர்வம்

கோவை:கோவை விழாவின் ஒரு பகுதியாக நேற்று நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.கோவை விழா குழுமம் மற்றும் கோவை மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விளையாட்டு மற்றும் பாரா விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் துவக்கி வைத்தார்.குழந்தைகளுக்கு டென்னிஸ் பந்து எறிதல், 25மீ., ஓட்டம், 50மீ., ஓட்டம், சாப்ட் பால் எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மேலும் பாரா விளையாட்டு வீரர்களுக்கு டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ விளையாட்டுகள் நடத்தப்பட்டன.இதில் 8 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தகைள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர் - வீராங்கனையினர் கவுரவிக்கப்பட்டனர். போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி