உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலையை சேதப்படுத்தும் கட்சி கொடி கம்பங்கள்

 சாலையை சேதப்படுத்தும் கட்சி கொடி கம்பங்கள்

கோவை: பல்லடத்தில் இன்று தி.மு.க., மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க முதல்வர் இன்று வருகிறார். அவரது வருகையையொட்டி, விமான நிலையத்தில் இருந்து அவிநாசி ரோட்டில் இரு புறமும் 20 கி.மீ., துாரத்துக்கு மேல் ரோட்டின் இருபுறமும், 15 அடிக்கு ஒரு கொடி கம்பம் என்ற அளவில், 'டிரில்' இயந்திரத்தில் துளையிடப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தற்காலிகமாக கொடி கம்பங்கள் நிறுவ நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோட்ட அளவிலான துணை குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். சாலை கட்டமைப்புகளின் மீது அதாவது மைய நடைபாதை, வடிகால், பாலங்கள் மீது தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது, விபத்து நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் வைத்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக, போலீசார் வாயிலாக வழக்குபதிவு செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க நிகழ்வுக்கு முந்தைய நாள், நிகழ்வின் நாள் மற்றும் அதன் பிந்தைய நாள் என, மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று நடக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த, 26ம் தேதியே இக்கொடி கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது ஆளுங்கட்சியினரின் விதிமீறலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை