உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

 சுற்றுலா வாகனங்களால் நெரிசல்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

வால்பாறை: வால்பாறையில் திரண்ட சுற்றுலா பயணியரின் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை, தொடர் அரசு விடுமுறை காரணமாக, வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். சுற்றுலா பயணியர், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக, சிறுகுன்றா கூழாங்கல்ஆறு, சின்னக்கல்லாறு அருவியில் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்கின்றனர். இதனால், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாக உள்ளன. சுற்றுலா வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் கூறியதாவது: வால்பாறை நகரில் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அவதிக்குள்ளாகிறோம். நகராட்சி சார்பில் படகு இல்லம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை நகரில் வாகன நெரிசலை தவிர்க்க கார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும், ஆக்கிரமிப்புகளையும் போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை