உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவில் இன்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

சிவில் இன்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், 'சிவில் இன்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் சவால்கள்' குறித்த, ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் உமா தலைமை வகித்தார். கோவை சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் பாலமுருகன் பேசுகையில், டிப்ளமோ படிக்கும் சிவில் இன்ஜினியர்களுக்கு, வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால், சமீப காலமாக டிப்ளமோ படிப்பில் சேர்வதில், மாணவர்களிடையே தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் டிப்ளமோ சிவில் இன்ஜினியர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்படலாம். இத்துறையில் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள் பெரிய, பெரிய நிறுவனங்களில் சேர்ந்து, தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். டிப்ளமோ சிவில் இன்ஜினியர்கள் பற்றாக்குறையால், பெரிய கட்டட கட்டுமான நிறுவனங்கள், பட்டப்படிப்பு படித்த நபர்களை தேர்வு செய்து, பணியில் ஈடுபடுத்துகின்றன, என்றார்.கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் நிவேதிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி