மேலும் செய்திகள்
24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
1 minutes ago
வடமாநில தொழிலாளி சடலத்தை விமானத்தில் அனுப்பியது போலீஸ்
1 minutes ago
வணிகமும் வீரமும் சேர்ந்த காவல் நகரம்
2 minutes ago
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 'லீக்' நுழைவுக்கான 'நாக் அவுட்' போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. புரோவாஸ் கிரிக்கெட் அகாடமி அணியும், கோயம்புத்துார் அவெஞ்சர்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த புரோவாஸ் கிரிக்கெட் அகாடமி அணியினர், 22.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 77 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் முகமது அபாஸ் நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய கோயம்புத்துார் அவெஞ்சர்ஸ் அணியினர், 11.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 78 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அடுத்து எஸ்.வி.ஆர்., கிரிக்கெட் அகாடமி அணியும், யுனைடெட் வாரியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. எஸ்.வி.ஆர்., அணியினர், 25 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 247 ரன் எடுத்னர். வீரர்கள் மாணிக்கம், 58 ரன், நடராஜன், 53 ரன், முத்து குமார், 52 ரன் எடுத்தனர். யுனைடெட் அணியினர், 10.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 24 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் பிரபு ஐந்து, சுபாஷ் நான்கு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
1 minutes ago
1 minutes ago
2 minutes ago