உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்மண்டல வூசூ போட்டி ;திறமையை காட்டிய வீராங்கனையினர் 

தென்மண்டல வூசூ போட்டி ;திறமையை காட்டிய வீராங்கனையினர் 

கோவை;தென் மண்டல அளவிலான பெண்கள் வூசூ போட்டியில் வீராங்கனையினர் தங்களின் திறமையை காட்டினர். தமிழ்நாடு வூசூ சங்கம், கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில் தென் மண்டல அளவிலான வூசூ போட்டி, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஜன., 18ம் தேதி துவங்கியது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சப்-ஜூனியர் பிரிவு சங்குவான் போட்டியில் கேரளாவின் ருவா நியாது, தமிழகத்தின் நிவேதா, தெலுங்கானா வீராங்கனை புவனா ஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஜெய்ன்சூ போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை ரேஷ்மி, கேரளாவின் ஆன் மரியா மார்கஸ், தெலுங்கானாவின் ரவுலா மோக்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். குயென்சூ போட்டியில் தமிழகத்தின் அபிருத்ரா, ஒடிசாவின் பிராப்தி பிரயாஷி, கர்நாடகா மாநில ஆத்யா கவுடர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஜூனியர் பிரிவு டைஜிஜியன் போட்டியில் தமிழக வீராங்கனை ஆதிரை முதலிடம், கேரளா மாநிலம் லுாஹா சுனீர் இரண்டாமிடம், ஒடிசாவின் மார்ன்டி மூன்றாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை