உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைனில் போதைப்பொருள்  ஓவர்... ஓவர்...விற்பனைக்கு போலீஸ் செக்

ஆன்லைனில் போதைப்பொருள்  ஓவர்... ஓவர்...விற்பனைக்கு போலீஸ் செக்

மேட்டுப்பாளையம்: வாட்ஸாப், சமூக வலைதளங்கள் வாயிலாக, 'ஆர்டர்' செய்யப்பட்டு, போதைப்பொருள் விற்பனை நடக்கிறதா என, கோவை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், இரவு நேரத்தில் தங்கும் இடங்கள், விடுதிகள், கல்லுாரிகள், பொது இடங்களை குறி வைத்து, வாட்ஸாப் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, போதைப்பொருள் விற்பனை நடந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமூகத்தின் நச்சாக உள்ள இந்த போதைப்பொருள் விற்பனையை, பொதுமக்கள் பங்களிப்புடன் போலீசார் முறியடித்து வருகின்றனர். சமீபத்தில், வட மாநிலத்திலிருந்து உயர்ரக போதைப்பொருளை, கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும், இதுபோன்ற போதைப்பொருள் விற்பனை நடக்கிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னுார் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து தீவிரம் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர் கூறியதாவது:- போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகள், கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் என அனைவரையுமே கண்காணித்து வருகின்றோம். வடமாநிலங்களில் இருந்து இங்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகவும், கூரியர் வாயிலாகவும் போதைப்பொருள் விற்பனை உள்ளதா எனவும் கண்காணித்து வருகின்றோம். ஆன்லைனில் போதைப்பொருள் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். மாவட்ட எல்லைகளில் போலீசார் 'அலர்ட்' செய்யப்பட்டு, வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை