உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை, மது விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்!

புகையிலை, மது விற்பனை தாராளம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்!

பொள்ளாச்சி, ;பொள்ளாச்சியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானங்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு வழியாக, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள், வாகனங்கள் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், கிராமங்களுக்கு செல்லும் மக்கள் வசதிக்காக கோட்டூர் ரோடு பெட்ரோல் பங்க் அருகேயும், அதன் எதிர் பகுதியிலும் பஸ்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாப் அருகே, டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில், மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தியும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தனியார் மதுபான பார் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை அமோகமாக நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, எவ்வித தடையும் இன்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்கள், மாணவியர் அங்கு நிற்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி