| ADDED : ஜன 01, 2024 12:38 AM
கோவை;கோவையில் இருந்து ஒடிசாவுக்கு வரும், 11ம் தேதி பொங்கல் கால சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகிறது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமானது(ஐ.ஆர்.சி.டி.சி.,) ரயில் சுற்றுலா மட்டுமின்றி சிறப்பு விமான சுற்றுலா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும், 11ம் தேதி கோவையில் இருந்து ஒடிசாவுக்கு, பொங்கல் கால சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகிறது.ஐந்து இரவு, ஆறு பகல்கள் கொண்ட சுற்றுலாவில் கோனார்க் சூரியன் கோயில், பூரி ஜெகந்நாதர் கோயில், சில்கா ஏரி, லிங்கராஜ் கோயில் உட்பட பல்வேறு இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா கட்டணமாக ரூ.46 ஆயிரத்து, 980 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில், விமான கட்டணம், தங்கும் வசதி, காலை மற்றும் இரவு உணவு வசதி உள்ளிட்டவை அடங்கும்.விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655 என்ற எண்ணிலும், www.irctctourism.comஎன்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., மண்டல இணை பொது மேலாளர்(சுற்றுலா) சாம் ஜோசப் தெரிவித்துள்ளார்.