மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
1 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
1 hour(s) ago
தேசிய நூலக வார விழா
1 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
1 hour(s) ago
கோவை: நீண்ட இடைவெளிக்கு பின், மூடப்பட்டிருந்த தபால் ஏ.டி.எம்.,கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கோவை குட்ஷெட் ரோடு மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையங்கள், கணபதி, போத்தனுார் பகுதியில் உள்ள தபால் நிலையங்களில், ஏ.டி.எம்., இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வசதி செய்யப்பட்டிருந்தன. தபால் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்புவது, நிர்வகிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனம், சில சிக்கல்களை சந்தித்ததால், இப்பணியில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இதனால், நாடு முழுதும் உள்ள தபால் ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டன. தபால் வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க முடியாமல், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலோ அல்லது நேரடியாக தபால் நிலையத்துக்கோ சென்று பணம் எடுத்து வந்ததால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். மூடப்பட்ட தபால் ஏ.டி.எம்., களை படிப்படியாக திறப்பதற்கு, தபால் இலாகா முயற்சி மேற்கொண்டு, மற்றொரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் பெற்று, ஏ.டி.எம்., திறப்பதற்கான பணிகள் முழுவீச்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னர் இருந்த இயந்திரங்கள் முழுவதுமாக மாற்றப்பட்டன. சில நாட்களுக்கு முன், நாடு முழுவதும் உள்ள தபால் ஏ.டி.எம்.,கள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில், போத்தனுார், குட்ஷெட் ரோடு, ஆர்.எஸ்.புரம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில், ஏ.டி.எம்., கள் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கணபதியில் மட்டும் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஓரிரு நாட்களில் திறக்கப்பட்டு விடும் என, தபால் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தவிர, தங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு உள்ள தபால் நிலையத்தில், விண்ணப்பம் கொடுத்து, இந்த கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago