உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு

பாலக்காடு நகராட்சி தலைவராக பா.ஜ., பிரமீளா சசிதரன் தேர்வு

பாலக்காடு:பாலக்காடு நகராட்சி தலைவராக பிரமீளா சசிதரன் தேர்வு செய்யப்பட்டார்.கேரள மாநிலத்தின், பா.ஜ., ஆளும் ஒரே நகராட்சி பாலக்காடு மட்டுமே. 52 வார்டுகள் கொண்ட நகராட்சியில், 28 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., தலைமையில் நகராட்சி நிர்வாகம் நடக்கிறது. நகராட்சி தலைவராக இருந்த பிரியா கடந்த டிச., 18ம் தேதி தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகினார்.இந்நிலையில், பாலக்காடு நகராட்சி அலுவலக அரங்கில் நேற்று நடந்த நகராட்சி தலைவருக்கான தேர்தலில், தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக பிரமீளா, காங்., வேட்பாளராக மினி, மா.கம்யூ., வேட்பாளராக உஷா போட்டியிட்டனர்.இதில், 28 ஓட்டுகள் பெற்று பா.ஜ., வேட்பாளர் பிரமீளா வெற்றி பெற்றனர். மினி - 17 ஓட்டுகள், உஷா - 7 ஓட்டுகள் பெற்றனர்.தேர்தலுக்குப் பின், அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரமீளா பதவி ஏற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ