உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்

கோவை;சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரி, அந்த பகுதி ரயில் பயனாளர்கள், பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.இதில் பங்கேற்ற போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:கோவை சிங்காநல்லுார் ஸ்டேஷனை கடந்து செல்லும், ஒரு சில ரயில்களை தவிர வேறு எந்த ரயில்களும் இங்கு நிற்பதில்லை. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். கொரோனாவுக்கு முன், இந்த ஸ்டேஷனில் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் உட்பட பல ரயில்கள் நின்று சென்றன. கொரோனாவுக்கு பிறகு நிற்பதில்லை. எப்போதும் போல் ரயில்கள் இங்கு நின்று செல்ல, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gopalan
மார் 17, 2024 06:01

It is a just demand. I have written about this to SR authorities at least two decades ago.They should extend the platform and allow at least one or two minutes stop either way for all express trains. several colleges, schools,hospitals and airport are in the near vicinity. heaven is not going to fall down by giving a two minutes stop . several passengers will get down/ board at this station and congestion at CBE main will reduce. also taxi ,auto fares upto CBE main will be saved.


மேலும் செய்திகள்