உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இரு மாநிலங்களில் மழை: உயர்கிறது தக்காளி விலை

 இரு மாநிலங்களில் மழை: உயர்கிறது தக்காளி விலை

கோவை: தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி பகுதியில், தக்காளி மொத்த மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு, 100 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கர்நாடகா மற்றும் மைசூரில் இருந்து, 70 சதவீதம் தக்காளியும், நாச்சிப்பாளையம், கிணத்துக்கடவு, பூளுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 சதவீதம் தக்காளியும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கோவை தக்காளி மொத்த மார்க்கெட்டில், கடந்த வாரம் கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, இப்போது 65 மற்றும் 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ 80 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. கோவை காய்கறி மொத்த விற்பனையாளர் சங்க நிர்வாகி துரைவேலு கூறுகையில், ''கடந்த சில நாட்களாக, தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்