உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரி விளையாட்டு விழா

ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரி விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியின் விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு, எஸ்.என்.ஆர் சன்ஸ் மேலாளர் சுந்தர் தலைமை வகித்தார். தேசிய கால்பந்து நடுவர் சுஷ்யானந்தன் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் அணிவகுப்பு, தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கிரீன் வாரியர்ஸ் அணியின் வினித், அட்சயா வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டமும் கிரீன் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது. மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் இணை மேலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். சுங்கத்துறை மற்றும் ஜி.எஸ்.டி., துணை கமிஷனர், சர்வதேச தடகள வீரர், 1996ம் ஆண்டு ஒலிம்பிக் தகுதி பெற்ற நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் பேசினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை