உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளி ஆபரணங்கள் கோவிலில் கொள்ளை

வெள்ளி ஆபரணங்கள் கோவிலில் கொள்ளை

கோவை;கோவிலில் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை கணபதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 36; இவர் வரதராஜபுரம் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 11ம் தேதி ஸ்ரீனிவாசன் கோவிலில் பூஜைகளை முடித்து வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அவர் வழக்கம் போல கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த, 1 கிலோ 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி உண்டியல் திருட்டு போயிருந்தது தெரிந்தது. இதையடுத்து ஸ்ரீனிவாசன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை