உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிரகதி மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை மையம்

 பிரகதி மருத்துவமனையில் ரோபோடிக் சிகிச்சை மையம்

கோவை: சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு ரோட்டில், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ மையமாக, பிரகதி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை மையத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி நாதன் திறந்து வைத்தார். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''மூட்டு மாற்று எலும்பியல் அறுவை சிகிச்சை துறையில், ரோபோடிக் சிகிச்சையின் தேவை மாற்று அறுவை சிகிச்சையில் புதிய வளர்ச்சியாகும். வழக்கமான அறுவை சிகிச்சையை விட ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், துல்லியமான அறுவை சிகிச்சை, வலி குறைவு, விரைவாக குணமடைதல், குறைவான ரத்த இழப்பு என ஏராளமான நன்மைகள் உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை