உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவர்கள் 17 பேருக்குரூ.1.41 கோடி கல்விக்கடன்

 மாணவர்கள் 17 பேருக்குரூ.1.41 கோடி கல்விக்கடன்

கோவை: கோவையில் நடந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில், 17 மாணவர்களுக்கு, ரூ.1.41 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், நடப்பு நிதியாண்டில், ஐந்தாவது முறையாக கல்விக்கடன் வழங்கும் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில், வங்கியாளர்கள், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் என, 80 பேர் பங்கேற்றனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நிறைமதி, 17 மாணவர்களுக்கு 1.41 கோடி கல்விக்கடன் வழங்குவதற்கான உத்தரவு வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட வங்கிகளில் இருந்து பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை