உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெகிழி ஒழிப்பு தின விழிப்புணர்வு களமிறங்கிய பள்ளி மாணவர்கள்

நெகிழி ஒழிப்பு தின விழிப்புணர்வு களமிறங்கிய பள்ளி மாணவர்கள்

உடுமலை: உடுமலையில், பள்ளி மாணவர்கள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.உடுமலை அருகே கோட்டமங்கலத்தில், நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நெகிழி ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியில் படிக்கும், 7 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், உடுமலையில் பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கமளித்து, பொதுமக்களுக்கு காகித பைகளை வழங்கியும் விழிப்புணர்வு செய்தனர். மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை