உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்டைஸ் விளையாட்டு போட்டி: எஸ்.என்.எஸ்., கல்லூரியில் துவக்கம்

சென்டைஸ் விளையாட்டு போட்டி: எஸ்.என்.எஸ்., கல்லூரியில் துவக்கம்

கோவை:இன்ஜி., மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி சத்தி ரோடு எஸ்.என்.எஸ்., டெக் கல்லுாரியில் நேற்று துவங்கியது. சென்டைஸ் (கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., ஸ்போர்ட்ஸ்) சார்பில் 13ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. போட்டியை கர்னல் ஆறுச்சாமி, எஸ்.என்.எஸ்., கல்லுாரி முதல்வர் செந்துார்பாண்டியன், துணை முதல்வர்கள் தமிழ்செல்வன், விவேகானந்தன், உடற்கல்வி இயக்குனர் தினகரன் ஆகியோர் போட்டிக்கான அட்டவணை, கடந்தாண்டு வெற்றிபெற்றவர்களின் விவரம் உள்ளிட்டவை அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு போட்டியை துவக்கி வைத்தனர். எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் பெண்களுக்கான த்ரோபால், பூப்பந்து, வாலிபால், கோ-கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடக்கின்றன. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதன், கோ-கோ போட்டியில் எஸ்.என்.எஸ்., டெக் மற்றும் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை