உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவுநீர்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

 பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவுநீர்; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்

ரோட்டில் கழிவுநீர் கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சர்வீஸ் ரோட்டில் பள்ளி முன்பாக கால்வாய் சேதமடைந்து அதிகளவு கழிவுநீர் ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும். - சுந்தர்: ரோட்டோரம் குப்பை கோட்டூர் ரோட்டில் இருந்து ஜோதிநகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில், குப்பை மற்றும் இறைச்சி கழிவு கொட்டிச் செல்வதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் நிலவுகிறது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். எனவே, இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். - -டேவிட்: விளம்பர தொல்லை வால்பாறையில் இயங்கும் அரசு பஸ்சில், திருக்குறள் பலகை மீது 'நான் உயிர் காவலன்' என்ற விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், பஸ் பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, திருக்குறள் பலகை மறைக்காதவாறு விழிப்புணர்வு விளம்பரம் வைக்க வேண்டும். - கணேசன்: வேகத்தடை அமைக்கணும்! கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள வளைவு பகுதி அருகே, வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் அதிகம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, நெடுஞ் சாலைத்துறை சார்பில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். - கருப்புசாமி: மேம்பாலம் அருகே செடிகள் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் ஓரத்தில் இருக்கும் திட்டுகளில், ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ளன. இதனால், திட்டில் நடந்து செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். -- கோகுல்: நாய்கள் தொல்லை உடுமலை நகராட்சி அண்ணாகுடியிருப்பில், ஏராளமான நாய்கள் வலம் வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம்: நிழற்கூரை பராமரிப்பில்லை உடுமலை செஞ்சேரிமலை ரோடு, வெள்ளியம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பில்லை. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நிழற்கூரை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவசண்முகம்: சேதமடைந்த திட்டச்சாலை உடுமலை 100 அடி திட்டச்சாலையில், குண்டும் குழியுமாக மாறி வருவதால், வாகன ஓட்டுநர்கள் செல்ல முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன்: சுகாதாரம் பாதிப்பு உடுமலை ஏரிப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே மழைநீர் ஓடை துார்வாரிய சகதியை ரோட்டோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவக்குமார்: பாலத்தை அகலப்படுத்தணும் உடுமலை ஜீவா நகரிலிருந்து கண்ணமநாயக்கனுார் செல்லும் வாய்க்கால் பாலம் குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பாலத்தை அகலப்படுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன்: கால்வாயை மூடவேண்டும் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மழை நீர் கால்வாய் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கால்வாயை மூட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை