கோவை;ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்த இன்ஜி., மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில், சக்தி கல்லுாரி அணி கோப்பையை தட்டிச்சென்றது.ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 6ம் ஆண்டு எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கோப்பைக்கான விளையாட்டு போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதன் ஹேண்ட்பால் போட்டியில் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டியிட்டன.இதன் நாக் அவுட் சுற்றில், சிறப்பாக விளையாடிய, ராமகிருஷ்ணா இன்ஜி., முன்னாள் மாணவர்கள், சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி மற்றும் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி ஆகிய நான்கு அணிகள், லீக் போட்டிக்கு தகுதி பெற்றன.லீக் சுற்றுப்போட்டிகளில், அதிக புள்ளிகள் எடுத்து சக்தி கல்லுாரி அணி முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, குமரகுரு கல்லுாரி அணி இரண்டாமிடமும், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, மூன்றாமிடமும் பிடித்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் ஹரிஷ், கார்த்திக் பரிசுகளை வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் நித்தியானந்தன் செய்திருந்தார்.