உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்டைஸ் மண்டல பூப்பந்து :சக்தி கல்லூரிக்கு வெள்ளி

சென்டைஸ் மண்டல பூப்பந்து :சக்தி கல்லூரிக்கு வெள்ளி

கோவை;இன்ஜி., மாணவர்களுக்கான மண்டல அளவிலான பூப்பந்து போட்டியில் சக்தி கல்லுாரி அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.'சென்டைஸ்' எனப்படும், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., ஸ்போர்ட்ஸ் சார்பில் இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.இப்போட்டியில், 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதன் அரையிறுதியில், எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணியை 2 - 0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இதில், ஈரோடு கொங்கு கல்லுாரி அணியிடம் வெற்றி வாய்ப்பை தவற விட்டு, வெள்ளிப்பதக்கம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி