உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை: ரத்தினம் குழுமத்தின் ஏ.ஐ.சி., ரைஸ், மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தொழில்முனைவு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடந்த முகாமில், சென்னை மண்டல மத்திய வித்யாலய சங்கத்தின் துணை ஆணையர் செந்தில் குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிரதான் மந்திரி பள்ளிகள் திட்டத்தினைச் சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 190க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். வாத்வானி பவுண்டேஷன் இணைந்து நடத்திய பயிற்சி முகாமை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக பிராந்திய ஒருங்கிணைப்பாளர் நந்தஜித் ராபா, வாத்வானி பவுண்டேஷனைச் சேர்ந்த ஸ்வேதா, விவேக் குமார் துவக்கி வைத்தனர். ரத்தினம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், ரத்தினம் குழுமத்தின் தலைமை வணிகப் பிரிவு தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை