உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம்

மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம்

மேட்டுப்பாளையம்;காரமடை அருகே மருதூரில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில், பங்குனி மாத முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, காலை கோவில் நடை திறந்தவுடன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. வெற்றிலை மற்றும் மலர் அலங்காரத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவில், தாயனூர் சுவர்ணமலை முருகன் வள்ளி கும்மி குழுவினரின், வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை