உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பு பூஜை

கோவில்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பு பூஜை

- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரத்தில், தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்துக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே காப்பு கட்டி, முருகனை வழிபடுவதற்கு பக்தர்கள் விரதமிருக்கின்றனர்.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.மாலையில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில், கோவிலுக்குள் சப்பரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.* திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், பாலமுருகனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.* குரும்பம்பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், இரண்டாமாண்டு தைப்பூச தேரோட்ட விழா நடந்தது.நேற்று காலை, கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் அருள்பாலித்தார். மாலையில் தேர் புறப்பாடு, திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.* பொள்ளாச்சி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி பழநி பாத யாத்திரை குழு மற்றும் ஜோதிநகர், பி.கே.எஸ்., காலனி, குறிஞ்சி நகர், காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில், 11ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. பி.கே.எஸ்., காலனி முத்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மாலை, 4:30 மணிக்கு பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவில்களில் நேற்று, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.* சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் கோவிலில், முருகப்பெருமானுக்கு தைப்பூச நாளான நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு பல்வேறு வகையான பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

உடுமலை

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கும் சுப்ரமணியசுவாமிக்கு, சிறப்பு அபிேஷகங்களுடன் அலங்காரம் நடந்தது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.* காமாட்சி அம்மன் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளத்திலுள்ள ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனையும் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். * பழனியாண்டவர்நகரில், தேரில் முருகர் படம் வரைந்து பெண்கள் கும்மியடித்தனர். சித்தி விநாயகர் கோவிலில், பாலமுருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.* தைப்பூச நாளையொட்டி, நிலாச்சோறு வழக்கமும் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது. கிராமத்தில் பொது இடத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, வாழைத்தோரணம் கட்டி, பழங்கள் படைத்தும், பூஜை செய்தும் வழிபாடு நடந்தது.காப்பு கட்டியது முதல் ஒன்பது நாளில் ஒவ்வொரு நாளும், அவரவரர் வீட்டிலிருந்து, இடித்த மாவு, சாத வகைகள், பல்வேறு உணவு பண்டங்களை சமைத்து எடுத்து வந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் கூடி கும்மியடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை