உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனீர் பள்ளியில் விளையாட்டு விழா

பயனீர் பள்ளியில் விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கல்வி நிலையங்களில் விளையாட்டு விழா நடந்தது.விழாவுக்கு பயனீர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் அபர்ணா ராஜ்குமார் தலைமை வகித்தார். ராமகிருஷ்ணா கிரிக்கெட் அகாடமியின் முதன்மை பயிற்சியாளர் குருசாமி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு, தேசிய கொடியை ஏற்றி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். பள்ளி நிர்வாக குழுவைச் சேர்ந்த கிரண் போட்டிகளை துவக்கி வைத்தார்.சிறந்த தடகள வீரராக மாணவர் பிரிவில் முகமது பைசலும், மாணவியர் பிரிவில் தனுஸ்ரீ தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை பிரியா, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி