உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்தை குலைக்கும் வாகனங்கள் நிறுத்தம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போக்குவரத்தை குலைக்கும் வாகனங்கள் நிறுத்தம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை பிரதான ரோடுகளில், வாகனங்கள் வரன்முறை இல்லாமல் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை நகரின் முக்கிய பிரச்னைகளில், போக்குவரத்து நெரிசலும் தீராத ஒன்றாக தொடர்ந்து நடக்கிறது.நெரிசலை குறைப்பதற்கு தளி ரோடு, பொள்ளாச்சி - உடுமலை - பழநி ரோடுகளில் சிக்னல்கள் இருப்பினும் நகர வீதிகளில் வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை.நகரின் பெரும்பான்மையான பிரதான ரோடுகளில் வாகனங்கள், குறிப்பாக கார்கள், ரோடுகளின் பாதிவரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.பலமணி நேரங்களாக நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்கின்றனர். ராஜேந்திரா ரோட்டில் சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, தொடர்ந்து கார்களும் ரோட்டை மறித்து வரிசையாக நிறுத்தப்படுகின்றன. வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.அவசர தேவைக்கும் வாகனங்களை மாற்றி நிறுத்துவதற்கு, அறிவுறுத்த முடியாமல் வாகன ஓட்டுநர்களை தேட வேண்டியுள்ளது. நகர வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான நடவடிக்கை அவசியமாகிறது.குறிப்பாக, சந்தைரோடு, உடுமலை - பொள்ளாச்சி ரோடு, தளி ரோடுகளில் தொடர்ந்து இப்பிரச்னை இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை