உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஹெல்மெட் அணியாத மாணவர் விபத்தில் பலி

 ஹெல்மெட் அணியாத மாணவர் விபத்தில் பலி

தொண்டாமுத்தூர்: பேரூர், சிறுவாணி மெயின்ரோட்டை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் பிரவீன்,15. கோவைபுதூரில் உள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு, பிரவீன் தனது நண்பரான மணிகண்டன்,19 என்பவருடன், பைக்கில் மாதம்பட்டியில் உள்ள பேக்கரிக்கு, சென்று கொண்டிருந்தனர். மணிகண்டன் பைக்கை ஓட்டிச் செல்ல, பிரவீன் பின்னால் அமர்ந்திருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மாதம்பட்டி நால்ரோடு சந்திப்பு அருகே, வளைவில் அதிக வேகமாக சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, இருவரும் கீழே விழுந்தனர்.பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை