உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பூர், கோவையில் ஜவுளி ஒப்பந்தம் செய்ய தைவான் ஆர்வம்

திருப்பூர், கோவையில் ஜவுளி ஒப்பந்தம் செய்ய தைவான் ஆர்வம்

கோவை; தமிழ்நாடு - தைவான் தொழில்நுட்ப ஜவுளி தொழில் கூட்டாண்மை கருத்தரங்கு, கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), தமிழ்நாடு ஜவுளி துறை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தின. இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) கோவை கிளையின் தலைவர் கோபிக்குமார் வரவேற்று பேசுகையில், செயற்கை இழை தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளில், தைவான் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது, என்றார். தைவான் ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்டின் ஹாங் பேசுகையில், சர்வதேச அளவில் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பருத்தி விளைச்சல் போதுமானதாக இல்லை. எனவே செயற்கை இழைகள் ஜவுளித்துறையின் கவனத்தை கவர்ந்தது. தைவான் இந்த செயற்கை இழையில் 30 ஆண்டு ஆராய்ச்சியை கொண்டுள்ளது. உலக நாடுகள் கம்போடியா, இந்தோனேஷியா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து, செயற்கை நூலிழைகளை வாங்குகின்றன. ஐரோப்பிய நாடுகளில் செயற்கை இழை தயாரிப்புகளுக்கு தேவைகள் உள்ளன. எனவே இந்தியா வுடன் இணைந்து செயல்பட ஆர்வம் கொண்டுள்ளது. செயற்கை நூலிழை, நெசவு, ஆயத்த ஆடைகள், தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பில் இருதரப்பு ஒப்பந்தங்கள் முதலீடுகளை மேற்கொள்வதில் முன்வந்துள்ளது. கோவை, திருப்பூரில் இந்த ஒத்துழைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்,'' என்றார். நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் குமார் துரைசாமி, தமிழ்நாடு கைத்தறித்துறை இயக்குனர் மகேஸ்வரி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்கை இழை பிரிவு தலைவர் அருண் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'முதலீடு செய்ய வசதி'

தமிழ்நாடு தொழில்துறை செயலர் அருண்ராய் பேசுகையில், தமிழ்நாட்டிற்கும், தைவானுக்கும் இடையே, நீண்ட கால வணிக தொடர்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு, தொழில்நுட்ப ஜவுளி துறையில், 20 சதவீத முதலீட்டு மானிய திட்டத்தை கொண்டுள்ளது. தொழில் தொடங்குவோருக்கு புதிய ஜவுளி பூங்காவை உருவாக்கியுள்ளது. முதலீடு செய்யவும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை