உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு ரூ.1 கோடி தமிழக அரசு விருது

 ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு ரூ.1 கோடி தமிழக அரசு விருது

அன்னூர்: ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு, சமூக நல்லிணக்க விருதும், ஒரு கோடி ரூபாய் நிதியும், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளுக்கு, சமூக மத நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் ஒட்டர்பாளையம் உள்பட சேலம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 6ம் தேதி, சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், விருது மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரிக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி