உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

வால்பாறை:வால்பாறையில் தைப்பூசத்திருவிழா நேற்று காலைகொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு தைப்பூசத்திருவிழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் முருகன் தேவியருடன் கோவிலை வலம் வந்தார். பின் காலை, 10:00 மணிக்கு, தைப்பூச விழாக்குழு தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில், திருக்கொடியேற்றப்பட்டது.விழாவில் வரும் 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு வால்பாறை பக்தர்கள், பால்குடம், தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, காலை, 10:00 மணிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது.தொடர்ந்து நல்லகாத்து பாலத்திலிருந்து முருகபக்தர்கள், அங்க அலகு பறவைக்காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிவழியாக கோவிலை சென்றடைகிறது. தொடர்ந்து மதியம், 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.மாலை, 4:30 மணிக்கு அலங்காரத்தேரில் வள்ளி, தெய்வானை தேவியருடன் திருமுருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழு செயலாளர் மயில்கணேஷ், பொருளாளர் சிந்துசெல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை