மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
9 hour(s) ago
நாளைய மின்தடை
9 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
9 hour(s) ago
கோவை:கோவைக்கான வரைவு 'மாஸ்டர் பிளான்', அரசிதழில் வெளியிட்ட பின், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க, ஒரு வாரமாகும். அப்போது, 'க்யூஆர்' கோடு அறிமுகம் செய்ய, நகர ஊரமைப்புத்துறை திட்டமிட்டுள்ளது; மொபைல் போனில் ஸ்கேன் செய்து, எளிய முறையில் பார்க்கலாம்.வரும், 2041ல் எதிர்பார்க்கும் மக்கள் தொகை அடிப்படையில், கோவை மாவட்டத்துக்கான 'மாஸ்டர் பிளான்' (முழுமை திட்டம்), நகர ஊரமைப்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் பின், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். 'மாஸ்டர் பிளானில்' திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில், பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்; 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அரசிடம் அனுமதி பெற்று, மாற்றங்கள் செய்து இறுதி 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்.நகர ஊரமைப்பு துறை இணை இயக்குனர் ராஜகுரு கூறுகையில், ''வரைவு மாஸ்டர் பிளானுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது; அரசிதழில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. உள்ளூர் திட்ட குழுமத்தில் ஆலோசித்து விட்டு, அடுத்த வாரம், பொதுமக்கள் பார்வைக்கு இணைய தளத்தில் வெளியிடப்படும். 'க்யூஆர்' கோடு அறிமுகம் செய்ய உள்ளோம்; மொபைல் போனில், ஸ்கேன் செய்தும் பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago