உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டம் வராததால் கூட்டம் ரத்து

கூட்டம் வராததால் கூட்டம் ரத்து

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கூட்டம் வராததால் ரத்து செய்யப்பட்டது.மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று காலை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம் என வியாபாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.நேற்று காலை கூட்டம் தொடங்கியது. கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார், நகராட்சி கமிஷனர் அமுதா, தாசில்தார் சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, சுமார் 10 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும், வரும் 27ம் தேதி கூட்டம் நடக்கும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்தார். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ''வரும் 27ம் தேதி மீண்டும் கூட்டம் நடக்கும். ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் என, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பு அவர்களே அகற்றாவிட்டால், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக அகற்றப்படும்,'' என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ