உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதி துவங்கிய புதுக்கவிதை விருட்சம் போல் வளர்ந்துள்ளது

பாரதி துவங்கிய புதுக்கவிதை விருட்சம் போல் வளர்ந்துள்ளது

கோவை:கோவை மாவட்ட மைய நுாலகம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் நடந்தது.இந்த நிகழ்ச்சியில், கவிஞர் அன்புசிவா மற்றும் அமலா பிரித்தி இணைந்து எழுதிய, 'எனக்கு ஒரு செல்லப் பேரு வை' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. நுாலை, எழுத்தாளர் அவைநாயகன் வெளியிட, ஜாக்குலின் மேரி பெற்றுக்கொண்டார்.நுால் குறித்து, தொண்டாமுத்துார் அரசு பள்ளி ஆசிரியர் திலகவதி பேசியதாவது:பாரதி தொடங்கி வைத்த புதுக்கவிதை, தமிழ் இலக்கியத்தில் பெரிய விருட்சம் போல் வளர்ந்துள்ளது. பல புதிய கவிஞர்கள் உருவாகி வருகின்றனர். இளைஞர்கள் காதல் என்ற பொருளை மையப்படுத்தி, அதிக கவிதைகள் எழுதுகின்றனர்.பாரதி, பாரதிதாசன், கவிமணி, கண்ணதாசன் போன்ற மூத்த கவிஞர்களும் காதலைப் பற்றி கவிதை எழுதி உள்ளனர். ஆனால் அவர்கள் சமூகம் குறித்து, அதிகம் சிந்தித்து எழுதி உள்ளனர். புதியவர்களும், இன்றைய சமூக பிரச்னைகளை பற்றி, கவிதைகள் எழுத வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கவிஞர்கள் இளவேனில், இளஞ்சேரல், காமு, ரமணி, ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை