உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வடிகால் வசதி இல்லாமல் சாலை எதிர்த்ததால் கிடைத்தது தீர்வு

 வடிகால் வசதி இல்லாமல் சாலை எதிர்த்ததால் கிடைத்தது தீர்வு

அன்னூர்: அன்னூர் மேட்டுப் பாளையம் சாலையில், ஜீவா நகரில் இருந்து ஆயி கவுண்டன் புதூர் செல்லும் வழியில் 1,300 மீ., தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அம்மன் நகர் பகுதியில், வடிகால் இல்லாமல், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதையும் மீறி நேற்று சாலை அமைக்கும் பணி நடந்தது. ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள், அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். நெடுஞ்சாலை ரோந்து எஸ்.ஐ.,கனகராஜ், ஒன்றிய சாலை ஆய்வாளர் ஜெசிந்தா ஆகியோர் பேச்சு நடத்தினர். 'கழிவுநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை