| ADDED : மார் 14, 2024 11:06 PM
பொள்ளாச்சி:'உலக அரங்கில் அனைவரின் பார்வையும் படும்படி, ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம் நாட்டில் உள்ளன,'என, பொள்ளாச்சியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், 'தலைமைப் பண்பின் மாண்புகள்', 'தலைமைத்துவம்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கல்லுாரி இயக்குனர் பாலுசாமி, வரவேற்றார்.சிம்ஸ் கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் பேசியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை குறிப்பிட்டு, இலக்கை நோக்கி மாணவர்கள் கனவு காண வேண்டும். இந்தியாவின் சிறப்பான எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது.எனவே, இன்றைய இளைஞர்கள் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்தியா அனைத்து நிலைகளிலும் ஏராளமான வளர்ச்சி பெற்று வருகிறது. உலக அரங்கில் அனைவரின் பார்வையும் படும்படி, ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம் நாட்டில் உள்ளன. தகுதிகளை வளர்த்துக்கொண்டு, கடின உழைப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மேலும், மாணவர்கள் 6 பேருக்கு, மேலாண்மை கல்வி உதவித்தொகை மற்றும் எம்.எஸ்.எம்.இ., சிறு குறு தொழில் நிறுவனம் நடத்திய சான்றிதழ் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர் சர்மிளா உள்ளிட்ட பேராசிரியர்கள் பலர் செய்திருந்தனர். மாணவி லாவண்யா நன்றி கூறினார்.