உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், 'யு டர்ன்' பகுதியில் திரும்பிய லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதித்தது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த வழித்தடத்தில் முக்கிய பகுதிகளில் மேம்பாலம் மற்றும் 'யு டர்ன்' அமைக்கப்பட்டுள்ளது. இதில், அவ்வப்போது விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.கோவில்பாளையம் அருகே, 'யு டர்ன்' இருக்கும் இடத்தில் நேற்று மதியம் லாரி திரும்பிய போது, திடீரென பழுதடைந்து ரோட்டிலேயே நின்றது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், லாரி திரும்பிய நிலையில் பழுதடைந்ததால் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதுகுறித்து, வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும், லாரி போன்ற வாகனங்கள் திரும்பும் போது பின் வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை