உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருமான வரித்துறை சார்பில் மரம் நடுவிழா

வருமான வரித்துறை சார்பில் மரம் நடுவிழா

கோவை;உக்கடம் பெரியகுளம் கரையில், வருமான வரித்துறையின் சார்பில், வளர்ந்தமரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.மத்திய அரசின் 'ஸ்வச்தா பக்வாடா' திட்டத்தின் கீழ், கோவையின் பல்வேறு பகுதிகளில், பசுமையை அதிகரிக்கும் விதமாக, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, உக்கடம் பெரியகுளம் கரையில், வளர்ந்த மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வருமான வரித்துறை கோவை தலைமை ஆணையர் சந்தனா ராமச்சந்திரன் இதற்கு தலைமை வகித்தார்.திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் சந்திரசேகரன் மற்றும் வருமான வரித்துறையின் பல்வேறு அதிகாரிகளும் இதில் பங்கேற்று, வளர்ந்த மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியின் பசுமை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், மரம் நடும் இயக்கத்தின் கீழ், இங்கு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன; இவை தொடர்ந்து பராமரிக்கப்படும். 'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ